ஆன்மிக களஞ்சியம்

அகத்தியர் சென்றதும் சுனைக்குள் போன முருகன்

Published On 2024-05-10 10:37 GMT   |   Update On 2024-05-10 10:37 GMT
  • அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர்.
  • சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார்.

அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார்.

அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது.

தோரணமலையின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே குழிகள் உள்ளன.

மிக அழகாக வட்ட வடிவத்தில் இருக்கும் அந்த குழிகள் எல்லாம் அகத்தியர், தேரையர் கண்காணிப்பில் சித்தர்கள் மூலிகைகளை இடித்து மருந்து தயாரித்த இடங்கள் என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர்.

சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார்.

அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார்.

இதனால் மற்ற மகரிஷிகள், முனிவர்கள், சித்தர்களும் தோரண மலையில் இருந்து இடம்பெயர்ந்தனர்.

இதன் காரணமாக தோரணமலை அழகன் முருகன் ஆராதனை செய்யப்படாத நிலை ஏற்பட்டது.

அகத்தியர், தேரையர்களின் மருத்துவ தயாரிப்பு இடங்களும் இருந்த இடம் தெரியாமல் தூர்ந்து போய்விட்டன.

நாளடைவில் ஒட்டுமொத்த தோரணமலையும் மக்கள் கவனத்தில் இருந்து திசைமாறிப்போனது.

மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

Tags:    

Similar News