ஆன்மிக களஞ்சியம்
இங்கு முருகனை வணங்கினால் திருச்செந்தூரில் வணங்கிய பலன் கிடைக்கும்
- தோரண மலையில் குகையில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார்.
- இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
தோரண மலையில் குகையில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார்.
இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
இதனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் தோரண மலைக்கும் வந்து செல்கிறார்கள்.
'குகைக்குள் வாழும் குகனே'
பாரதியார் பெண் எடுத்த ஊர் கடையம்.
அவரது மனைவி செல்லம்மா பிறந்த ஊர் என்பதால் பாரதியார் கடையம் வரும்போதெல்லாம் தோரண மலை சென்றதாக கூறுகின்றனர்.
பாரதி 'குகைக்குள் வாழும் குகனே' என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.