ஆன்மிக களஞ்சியம்
மன அமைதி தரும் மலை... சித்தர்களின் ஆசி கிடைக்கும் மலை...
- மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து வருகிறது.
- எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.
கடையம், பாவூர்சத்திரம், ஆவுடையானூர் உள்பட சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் தவறாமல் தினமும் மலை ஏறி முருகனை வழி படுவதை கடமையாக வைத்துள்ளனர்.
தோரணமலையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டிலிலும் ஏற, ஏற முருகன் வாழ்வில் நம்மை உயர்த்துவார்.
மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து வருகிறது.
எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தேரையர் உள்ளிட்ட சித்தர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும்.
முருகனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் ஒருங்கேப் பெறவே முக்கிய நாட்களில் இங்கு விமரிசையாக விழா நடத்தப்படுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.