ஆன்மிக களஞ்சியம்

மருதமலை-ஆதிமூலஸ்தானம்

Published On 2023-10-22 11:22 GMT   |   Update On 2023-10-22 11:22 GMT
  • இங்குதான் மருதாசலபதியான முருகனின் ஆதி ஸ்தலம் அமைந்துள்ளது.
  • நடுப்புறம் முருகன் இருபுறமும் வெள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

படிக்கட்டுக்களை (837 படிகளை) ஏறி முடிந்ததும் மேற்புறம் அமைந்துள்ள மூலஸ்தானத்தை காணலாம்.

இதுதான் பூர்வீகக்கோவில்.

இங்குதான் மருதாசலபதியான முருகனின் ஆதி ஸ்தலம் அமைந்துள்ளது.

ஆதிகாலத்தில் சூரர்களால் துன்பப்பட்ட தேவர்கள் சிவனாரின் வேண்டுதலுக்கு இணங்கி

இங்கே வந்து சூரசம்ஹாரத்திற்காக முருகன் எழுந்தருளப் பிரார்த்தித்த இடம் இதுவே.

இந்த மூலஸ்தானத்தில் மூன்று கல் ரூபமாக மூர்த்தி அமைந்துள்ளது.

நடுப்புறம் முருகன் இருபுறமும் வெள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

இதைத்தான் ஆதியில் வணங்கினார்கள்.

Tags:    

Similar News