ஆன்மிக களஞ்சியம்

திருமண தடை நீக்கும் குகை முருகன்

Published On 2024-05-10 11:30 GMT   |   Update On 2024-05-10 11:30 GMT
  • இக்கோவிலை வழிபடுதன் மூலம் திருமணத் தடை நீங்குவதாகவும் புத்திர பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
  • மேலும் இக்கோவிலில் வைத்து பல்வேறு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

தமிழர்கள் சங்க காலம் தொட்டே முருக வழிபாட்டை மேற்கொண்டு வருவதாக பல்வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு இடங்களில் மலைகளில் முருகப் பெருமானுக்கு கோவில்கள் அமைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது.

தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

பல்வேறு மாவட்டத்திலிருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

தோரணமலையின் உச்சியில் அமைந்துள்ள முருகப் பெருமானை அகத்தியர், தேரையர் பல ஆண்டுகளுக்கு முன்பு வழிபட்டடதாக கூறப்படுகிறது.

அவர்கள் மலைகளில் பரந்து காணப்பட்ட பல்வேறு மூலிகைகளை கொண்டு மருத்துவம் செய்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த தலத்தில் தினந்தோறும் பூஜை நடைபெறுகிறது.

மேலும் தமிழ் மாத கடைசி வெள்ளியன்று காலையில் சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

கோவிலின் சிகர நிகழ்ச்சியாக தைப்பூச விழா ஓவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கோவிலை வழிபடுதன் மூலம் திருமணத் தடை நீங்குவதாகவும் புத்திர பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

மேலும் இக்கோவிலில் வைத்து பல்வேறு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

Tags:    

Similar News