கும்பம் - வார பலன்கள்

வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை

Published On 2024-11-11 02:45 GMT   |   Update On 2024-11-11 02:45 GMT

மாற்றங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி சனி வக்ர நிவர்த்தி ஆவதோடு தன லாப அதிபதி குரு 4, 9-ம் அதிபதி சுக்ரனுடன் பரிவர்த்தனை செய்வது என முக்கிய கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளது. தொழில் ரீதியான முன்னேற்றமும் இருக்கும். நிலையான வருமானம் உண்டாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் உண்டாகும். வீடு, நிலம், தோட்டம் வாங்கும் அமைப்பும் உருவாகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள்.தடைபட்ட சொத்து விற்பனை தற்போது நடந்து முழுத் தொகையும் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்தவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியதை முறையாக பிரித்து கொடுப்பீர்கள்.

தாய்வழி உறவு களால் ஏற்பட்ட மனஸ்தாபம் தாய்மாமனின் அனுசரனையால் சீராகும். சிலருக்கு வெளிநாட்டு வேலையை விட்டுவிடும் எண்ணம் தோன்றும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஏற்றமான நேரம். பங்குச் சந்தை ஆர்வலர்கள் ஒரே கம்பெனியின் பங்குகளை வாங்குவதை தவிர்க்கவும். திருமண முயற்சி கைகூடும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். பவுர்ணமியன்று அன்னதானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

Similar News