கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை

Published On 2024-12-02 02:30 GMT   |   Update On 2024-12-02 02:31 GMT

1.12.2024 முதல் 7.12.2024 வரை

விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வாரம்.ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையத் துவங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். அனைத்து வேலையிலும் சிறிய முயற்சியிலேயே நன்மைகள் கிடைக்கும். தடைகளை தகர்த்து வெற்றிநடை போடுவீர்கள். உடலிலும் உள்ளத்திலும் புதிய தெம்பு, தைரியம் குடி புகும். தொழிலில் நிலவி வந்த தேக்க நிலை அடியோடு மாறி நிறைவான லாபம் காண்பீர்கள். கையில் காசு சரளமாக புரளும்.

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விற்காமல் தேங்கிய சரக்குகள், கையிருப்பில் இருக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனையாகும்.உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும். கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு பயணம் செல்லலாம். நீங்கள் விரும்பிய அப்பார்ட்மென்டில் விரும்பிய வீடு கிடைக்கும். திருமண முயற்சி கைகூடும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்சன் குறையும். சனிக்கிழமை ராகு வேளையில் கால பைரவரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News