கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை

Published On 2024-12-16 03:03 GMT   |   Update On 2024-12-16 03:04 GMT

15.12.2024 முதல் 21.12.2024 வரை

லாபகரமான வாரம். ராசிக்கு 7-ம் அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.பங்குதாரர் வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நவீன ஆடம்பர பொருட்கள், வீடு, வாகன யோகம் ஏற்படும். பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும்.

தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடு பிடிக்கும். கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்தில் இணைவார். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் மிகுதியாகும். குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். மாற்று முறை வைத்தியத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஐயப்பனுக்கு துளசி சாற்றி வணங்க மனச் சுமை குறைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News