கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை

Published On 2024-12-09 02:22 GMT   |   Update On 2024-12-09 02:23 GMT

8.12.2024 முதல் 14.12.2024 வரை

வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். வெகு விரைவில் ஜென்மச் சனியிலிருந்து முழுமையாக விடுதலை.ராசியில் உள்ள சனி பகவானுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் பெற்ற செவ்வாயின் 8ம் பார்வை பதிகிறது. அனுபவப்பூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனையில் இருந்து விடுபடுவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும்.

நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும்.கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News