வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
சுமாரான வாரம். தன லாப அதிபதி குரு வக்ரம். அடைவதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் மேன்மையான பலன்களை பெற முடியும். சொத்து வாங்குவது, விற்பது போன்ற பெரிய பணம் தொடர்பான முக்கிய முடிவுகளை குரு வக்ர நிவர்த்தி வரை ஒத்திப் போடவும். ராசிக்கு பத்தில் சுக்ரன் குருப் பார்வையில் இருப்பதால் முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையான புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். அதன் மூலம் நல்ல வருவாயும் கிடைக்கும். பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.
பெண்களுக்கு தீபாவளிக்கு தாய் வீட்டுச் சீரும் அழைப்பும் வரும்.சாலையோர வியாபாரிகளுக்கு முதலீடு இரட்டிப்பு பலன் தரும். பணம் பைகளில், கைகளில் நிரம்பி வழியும். சிலர் ரிலாக்சாக மன மாற்றத்திற்காக தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள். ஜென்மச் சனியால் சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். குல தெய்வ வழிபாடு அவசியம்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406