மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை

Published On 2024-12-16 02:42 GMT   |   Update On 2024-12-16 02:46 GMT

15.12.2024 முதல் 21.12.2024 வரை

நன்மைகள் மிகுந்த வாரம் .பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம். ஒருவரின் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் அனைத்து குடும்ப நபர்களின் வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். அடிப்படை தேவைக்கு திணறியவர்களுக்கும் சரளமான பணப்புழக்கம் ஏற்படும். கலைத்துறையினருக்கு இது சிறப்பான காலமாகும். அரசு வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மூத்த சகோதர வழி ஆதாயம் உண்டு. ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

காதல் திருமண முயற்சி பலன் தரும் குழந்தை பாக்கியம் சித்திக்கும். சிலருக்கு அதிர்ஷ்ட பணம், பொருள், உயில் சொத்து கிடைக்கலாம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை இரட்டிப்பாகும். உங்களை சோர்வடையச் செய்த வம்பு, வழக்குகள் சாதகமாகும்.பிதுர் வழி சொத்துக்கள் தொடர்பான மனக்குழப்பம் சஞ்சலம் சீராகும். உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு உயரும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News