வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை
17.11.2024 முதல் 23.11.2024 வரை
இன்னல்கள் குறையும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 8ல் மறைவதால் மறைமுக வருமானம் கூடும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும்.பிறர் போற்றும் அளவிற்கு உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் . குடும்பத்தில் நிலவிய குறுக்கீடுகள் அகலும். தடைகள் தகறும். மனதில் நிம்மதி கூடும்.கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். புதிய முதலீட்டிற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேய்பிறை அஷ்டமியில் துர்க்கையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406