மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

Published On 2024-11-25 02:10 GMT   |   Update On 2024-11-25 02:18 GMT

24.11.2024 முதல் 30.11.2024 வரை

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். ராசிக்கு 3,6-ம் அதிபதியான புதன் மற்றொரு மறைவு ஸ்தானமான 8-ம் மிடத்தில் மறைந்து வக்ரமடைவது மேஷத்திற்கு ராஜயோக காலமாகும். தொழிலில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நேரமாகும். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இனி இல்லை என்ற நிலை இனி இல்லை. தொழில் பங்குதாரர் மற்றும் வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள்.பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும்.

ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். காதல் திருமணம் சிறு தடைக்குப் பிறகு கைகூடும். 30.11.2024 அன்று காலை 6.02-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது.மனசஞ்சலம் அதிகரிக்கும். சில எதிர்மறை சம்பவம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பது மற்றும் விவாதிப்பதையும் தவிர்க்கவும். நவகிரக காயத்திரி மந்திரம் படிக்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News