வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை
8.12.2024 முதல் 14.12.2024 வரை
தடைகள் விலகி மாற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ரம் பெறுவதால் நீச்ச பங்க ராஜயோக நிலையை அடைகிறார். கடின உழைப்பு, விடா முயற்சியால், வைராக்கியத்தால் தடைகளை கடந்து வெற்றி வாகை சூடுவீர்கள். கண்டும் காணாமல் இருந்த உறவுகள் வலிய வந்து பேசுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை அதிகரிக்கும். வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூலமாகும்.
தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப் படுத்தும். சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் வாங்கலாம். சீருடைப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். பெண்களுக்கு மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பன்னீர் அபிசேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406