இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
நினைத்தது நிறைவேறும் வாரம் . ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் பாக்கியாதிபதி குருவுடன் இணைந்து ராசியை பார்ப்பதால் பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரம்வயப்படும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.விவசாயத்தில் ஈடுபாடு விருப்பம் அதிகரிக்கும்.
தாய், தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சி கூடும். சிலர் அதிக முதலீடு செய்யும் புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் விரிவாக்கம் அல்லது குடும்ப சுப நிகழ்விற்காக கடன் பெறலாம். தொழிலுக்கு தேவையான திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள். பிள்ளைகளின் திருமணம், பிள்ளைபேறு என மனம் விரும்பும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளின் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும்.பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அனுசரனையும் உண்டு.
20.6.2022 இரவு 10.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர்பயணங்களை ஒத்தி வைக்கவும். பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406