12.01.2025 முதல் 18.01.2025 வரை
அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும் வாரம். ராசியில் உள்ள நீச்ச பங்க ராஜயோகம் பெற்ற பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் வக்ர கதியில் 12-ம்மிடம் செல்கிறார். புதிய தொழில் கூட்டாளிகள், ஒப்பந்ததாரர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலை, அரசு உத்தியோக முயற்சி பலன் தரும். சிலருக்கு சிறிய முயற்சியில் கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். ஆயுள் தீர்க்கம். சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்லிணக்கம் ஏற்படும்.
சிலர் தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயரலாம். கை மறதியாக வைத்த நகைகள், சொத்து பத்திரங்கள் கிடைக்கும். எல்லைத் தகராறு நீங்கும், பாகப்பிரிவினை சுமூகமாகும். மறைமுக வழிகளில் இலாபங்கள் பெருகி உங்களைத் திக்கு முக்காடச் செய்யும். இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை, லாட்டரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து கைக்கு கிடைக்கும்.
தந்தையின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும். நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கலாம். பவுர்ணமியன்று அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406