வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை
17.11.2024 முதல் 23.11.2024 வரை
வெற்றி நிறைந்த வாரம். உப ஜெய ஸ்தான அதிபதி புதன் தன அதிபதி சூரியனுடன் ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை.அனுபவ மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்.நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும்.பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.வீடு, வாகன முயற்சி பலிக்கும். அஷ்டமச் சனி முடியும் வரை புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம். தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406