கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை

Published On 2024-10-28 02:31 GMT   |   Update On 2024-10-28 02:31 GMT

27.10.2024 முதல் 3.11.2024 வரை

குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் வாரம். யோகாதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் வருமான பற்றாக்குறை அகலும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் தீபாவளி லாப விகிதம் அதிகமாக இருக்கும்.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். பூமி, மனைகள் வாங்குவதில் நிலவிய தடைகள் அகலும். மறு திருமண முயற்சி சாதகமாகும்.

வெகு விரைவில் அஷ்டமச் சனியின் தாக்கம் குறையப் போவதால் பெரிய அளவிளான எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். உள்ளம் மகிழும் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும் வாரம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.கணவன் மனைவி உறவு பலப்படும்.பெண்களுக்கு மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். காதல் பிரச்சனையால் வம்பு, வழக்கு வரலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. அம்மன் பாடல்கள் கேட்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News