வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை
24.11.2024 முதல் 30.11.2024 வரை
எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 5-ல் முயற்சி ஸ்தான அதிபதி புதனுடன் சேருகிறார். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும்.உங்கள் யோசனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை நேர்மறையாகச் செயல்படும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனச் சுமை குறையும்.அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அஷ்டமச் சனியால் தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும்.
கடன், நோய், எதிரி தொல்லை நிவர்த்தியாகும். கடக ராசிக்கு மார்ச் 29-க்குப் பிறகு திருமணம் நடத்தலாம். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும்.பூர்வீகத்தை விட்டு தொழில், உத்தியோகத்திற்கு சென்றவர்கள் நல்ல பொருளாதாரத்துடன் பூர்வீகத்தில் வந்து செட்டிலாவார்கள். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும்.கை,கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியிலிருந்து விடுதலை உண்டாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406