வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை
22.12.2024 முதல் 28.12.2024 வரை
அஷ்டமச் சனி பற்றிய பயம் விலகும். லாப குருவால் மறைமுக ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். மனைவி, பிள்ளைகளுக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.முன்னேற் றத்துக்குத் தடை இருக்காது. பூர்வீக நிலப் பிரச்சினை தீர்ந்து பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளை தொடங்கலாம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும், நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406