வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை
3.11.2024 முதல் 9.11.2024 வரை
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் வாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார். திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும்.உங்களின் ஆளுமைக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். விரும்பிய ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வந்து சேரும். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். சேமிப்புகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடு அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். சமுதாய அந்தஸ்து மிகுந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வீடு கட்டும் பணி துரிதமாகும்.
வாழ்க்கைதுணை, கூட்டாளிகள் அல்லது நண்பர்களால் ஏற்பட்ட மனக் கசப்பு சீராகும். சிலருக்கு உயில் எழுதும் சிந்தனை மிகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள். மார்ச் மாதம் அஷ்டமச் சனி முடிந்த பிறகு திருமணத்தை நடத்தவும். புத்திர பிராப்தம் சித்திக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டு தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406