கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை

Published On 2024-12-02 02:20 GMT   |   Update On 2024-12-02 02:22 GMT

1.12.2024 முதல் 7.12.2024 வரை

நிம்மதி பெருமூச்சு விடும் வாரம். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய்க்கு சுகாதிபதி சுக்ரனின் பார்வை. வெகு விரைவில் அஷ்டமச் சனி முடியப்போகிறது. தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது புத்திசா லித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலைமாறும்.

அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியும் கூடும். புத்திரம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. 7.12.2024 அன்று காலை 5.06 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும் பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிவ வழிபாடு முன்னேற்றத்தை அதிகரிக்கும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News