கடகம் - வார பலன்கள்

வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை

Published On 2024-11-11 02:41 GMT   |   Update On 2024-11-11 02:42 GMT

தன வரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம். கடக ராசிக்கு 7, 8-ம் அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் அஷ்டமச் சனியால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து காரியங்களும் சீராக நடந்து முடியும். தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டு. விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். காசு, பணம், துட்டு, மணி பல வழிகளில் வாசல் கதவைத் தட்டும். விவசாயிகளுக்குத் தடைபட்ட குத்தகை வருமானம் வந்து சேரும். குடியிருப்புகளுக்கு புதிய வாடகைதாரர் வரலாம். ஆன்மீக நாட்டம் கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். 12.11.2024 அன்று காலை 2.21 வரை சந்திராஷ்டமம் உள்ளது. பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். பவுர்ணமியன்று சிவசக்தியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

Similar News