பெருந்தன்மையான குணத்தால் பாராட்டு பெறும் துலாம் ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாபாதிபதி சூரியனுடன் இணைந்து லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார பற்றாக்குறை அகலும். புனித பயணங்கள் அதிகரிக்கும். அதிகாரவர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியும் கை கூடும்.
அதே சமயம் அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரோடு செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே ஆரோக்கிய சீர்கேடுகளும், அதனால் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். அலைச்சலை குறைத்துக் கொள்வதோடு, ஆகாரத்திலும் கட்டுப்பாடு செலுத்துங்கள்.
சனி - சூரியன் பார்வை
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன், அங்கிருந்து சனியைப் பார்க் கிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெற்றிருப்பதால் குடும்பச் சுமை கூடும். கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது. பிள்ளை களால் வந்த பிரச்சினை மீண்டும் தலைதூக்கும்.
பூர்வீக சொத்துகளின் மீதான பிரச்சினை அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் திருப்தி தராது. அதே சமயம் சனியை பார்க்கும் சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால், பண வரவு ஓரளவு திருப்தி தரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தை பொறுத்தவரை விருப்பம்இல்லாத இடத்திற்கு மாறுதல் வரலாம்.
சுக்ரன் நீச்சம்
ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அஷ்டமாதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது நன்மைதான் என்றாலும், அவர் உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும்.
அதனால் மருத்துவச் செலவும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கைதான் உங்களுக்கான துணை. அதை எப்போதும் கைவிடாதீர்கள். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சை முன்னிட்டு, சீர்வரிசை பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுன - செவ்வாய்
ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம் தான். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனித பயணங்கள் அதிகரிக்கும்.
தொழிலில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கிளைத் தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். 'வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டும், மனை கட்டி குடியேற வேண்டும்' என்றெல்லாம் மனதில் அசைபோட்டு பார்த்தவர்களுக்கு, இப்பொழுது அந்த ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேற வாய்ப்பு உருவாகும். பழைய நகைகளை கொடுத்து விட்டு புதிய நகைகள் வாங்கு வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்ம - புதன்
ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. நீண்டதூர பயணங்கள் நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்யும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. கூட்டுத் தொழில் நடத்துபவர்கள் தனித்து இயங்க முற்படுவர். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் அதிகரிக்கும். வியா பாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் வந்துசேரும்.
கலைஞர்களின் திறமை பளிச்சிடும். மாணவ - மாணவி களுக்கு கல்வியில் கவனச் சிதறல் ஏற்படலாம். பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். மாற்று இனத்தவர் களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 29, 30, செப்டம்பர்: 2, 3, 9, 10, 11, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.