கன்னி - வார பலன்கள்

வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை

Published On 2024-11-11 08:12 IST   |   Update On 2024-11-11 08:13:00 IST

சுமாரான வாரம். கன்னி ராசிக்கு 5,6-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 6ல் வக்ர நிவர்த்தியாகிறார். வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். சகோதர, சகோதரிகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சிலர் மன நிம்மதிக்காக வீடு மாறுவார்கள். நோய் தாக்கம் குறையும்.வாழ்க்கைத் துணையும், தொழில் பங்குதாரரும் நிறையச் செலவை இழுத்து விடுவார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம். சேவை மனப்பான்மையுடன் சமூக சேவை செய்வீர்கள்.

பிள்ளைகள் உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். வாழ்க்கை துணையின் பூர்வீகச் சொத்தில் மைத்துனரால் ஏற்பட்ட தடைகள் அகலும். இளம்பெண்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். இரண்டாம் திருமண முயற்சி நிறைவேறும். வருமானத்தில் பெரும் பகுதி கடனுக்கு செல்லும். அதே நேரத்தில் பிள்ளைகளால் ஆதாயம் உண்டு என்பதால் கவலையின்றி இருக்கவும். 14.11.2024 அன்று காலை 3.11 மணி முதல் 16.11.2024 அன்று காலை 3.16 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. தவறான போன் தகவலை நம்பி அக்கவுண்டில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. பவுர்ணமியன்று சத்தியநாராயணரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

Similar News