வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை
24.11.2024 முதல் 30.11.2024 வரை
நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தானத்தில் குரு பார்வையில் சஞ்சரிக்கிறார். நல்ல வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கூடி வரும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். அதே நேரத்தில் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலையக்கூடாது.
தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும். சட்ட சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்ட சிக்கலாக இருந்தாலும் நீதிமன்றப்படி ஏறுவதை தவிர்த்து பேசி தீர்க்க முயல வேண்டும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும். நீண்ட காலமாக நிலவிய சில பிரச்சனைகள் தீரப் போவதற்கான வழி பிறக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். கருட வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406