கன்னி - வார பலன்கள்

வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை

Published On 2024-12-09 07:42 IST   |   Update On 2024-12-09 07:44:00 IST

8.12.2024 முதல் 14.12.2024 வரை

சுமாரான வாரம். வக்ரம் பெற்ற ராசி அதிபதி புதன் விரயாதிபதி சூரியனுடன் 3ம்மிடத்தில் சேர்க்கை . எண்ணங்களை செயலாக மாற்ற முடியாது. மனதில் இனம் புரியாத பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். பெண்களின் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும். வீண் விரயம் அல்லது வைத்தியச் செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். வருமானத்தில் பெரும் பகுதி கடனுக்கு செல்லும். வீடு கட்ட போட்ட பட்ஜெட் எகிறும்.

புதிய கடன் தொகைக்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகுவீர்கள். தொழில் முன்னேற்றம், உத்தி யோகத்தில் உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். 11.12.2024 அன்று காலை 11.47 முதல் 13.12.2024 அன்று பகல் 1.19 வரை சந்திராஷ்டமம் உள்ளது. சற்று சுமாரான காலமாக இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். விரயமும் இழப்பும் எந்த விதத்தில் வேண்டுமானலும் இருக்கலாம் என்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News