வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை
1.12.2024 முதல் 7.12.2024 வரை
சுப மங்கள வாரம். 2, 9-ம் அதிபதி சுக்ரன் செவ்வாய் மற்றும் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். புதிய தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள்.பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், முதலீடு இல்லாத தொழில், ஆலோசனை தொழில் புத்தியைத் தீட்டி சம்பாதிப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.
திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். பெண்கள் இந்த கால கட்டத்தில் மாங்கல்யம் மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஜென்ம கேதுவின் காலம் என்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406