ஆட்டோமொபைல்
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தைக்கு 2019-20 நிதியாண்டு வெற்றிகரமானதாக அமைந்திருக்கிறது. 2019 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2020 நிதியாண்டில் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை 20.6 வளர்ச்சி பெற்று இருக்கிறது.
2020 நிதியாண்டில் மட்டும் 1,52,000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. இது 2019 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 26 ஆயிரம் யூனிட்கள் அதிகம் ஆகும். 2019 நிதியாண்டில் 126000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டில் விற்பனையாகி இருக்கும் 1,52,000 யூனிட்களில் 91 சதவீதம் ஸ்கூட்டர் மாடல்கள். மீதமுள்ள மூன்று சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் ஆகும். மேலும் இவற்றில் 90 சதவீத மாடல்கள் குறைந்த வேகத்தில் இயங்கக்கூடியவை என தெரியவந்துள்ளது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை பற்றிய அறிக்கையை எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளர்கள் ஆணையத்தின் தலைவர் சோஹிந்தர் ஜில் வெளியிட்டார்.