ஆட்டோ டிப்ஸ்

அடுத்த மாதம் இந்தியா வரும் 2023 ஹூண்டாய் வெர்னா

Published On 2023-02-27 12:23 GMT   |   Update On 2023-02-27 12:23 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் டிசைன்கள் சமீபத்தில் வெளியாகின.
  • அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வுக்கு முன் புதிய வெர்னா மாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வெர்னா மாடலுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் மற்றும் ஆன்லைனில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய வெர்னா மாடலின் டிசைன் படங்கள் வெளியிடப்பட்டன.

இதுதவிர 2023 ஹூண்டாய் வெர்னா புகைப்படங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன்படி புதிய கார் ரிடிசைன் செய்யப்பட்ட வெளிப்புறம், ஸ்போர்டினஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எலாண்ட்ரா மற்றும் இதர ஹூண்டாய் செடான் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 

 

காரின் முன்புறம் அகலமான கிரில், பிளாக் இன்சர்ட்கள், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், செங்குத்தான எல்இடி ஃபாக் லேம்ப்கள் உள்ளன. ரிடிசைன் செய்யப்பட்ட காரின் பொனெட்டின் கீழ் நீளம் முழுக்க எல்இடி லைட்டிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், க்ரம் விண்டோ, பாடி நிறத்தால் ஆன டோர் ஹேண்டில்கள் உள்ளன.

பிளாக் ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் விண்ட்ஷீல்டு, கனெக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்கிட் பிளேட், வெர்னாவுக்கு மாற்றாக அக்செண்ட் எழுத்துகள் இடம்பெறுகின்றன. காரின் உள்புறம் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், பவர்டு இருக்கைகள், ஆறு ஏர்பேக், புதிய லேயர் டேஷ்போர்டு, செண்டர் கன்சோல், ADAS போன்ற அம்சங்கள் உள்ளன.

புதிய வெர்னா மாடலில் 1.5 லிட்டர் NA நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 115 பிஎஸ் பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் புதிய மாடலில் நிறுத்தப்படுகிறது. மேலும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது.

Source: GaadiWaadi | Naver.com 

Tags:    

Similar News