ஆட்டோ டிப்ஸ்

இந்திய டெஸ்டிங்கில் சிக்கிய 2023 கியா செல்டோஸ்

Published On 2023-02-07 09:51 GMT   |   Update On 2023-02-07 09:51 GMT
  • கியா நிறுவனத்தின் 2023 செல்டோஸ் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • புதிய 2023 செல்டோஸ் மாடலில் பிஎஸ் 6 2.0 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.

கியா இந்தியா நிறுவனம் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய செல்டோஸ் மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 2023 செல்டோஸ் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், செல்டோஸ் மாடல் அப்டேட் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். புதிய மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்த எஸ்யுவி வெளிப்புற ஸ்டைலிங்கில் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 மாடலில் சிக்னேச்சர் டைகர் நோஸ், எல்இடி ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், முன்புற கிரில் பகுதியில் டிஆர்எல்கள் உள்ளன.

இத்துடன் டூயல் டோன் சில்வர் மற்றும் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரிடிசைன் செய்யப்பட்ட டெயில் லேம்ப்கள், இலுமினேட் செய்யப்பட்ட லைட் ஸ்டிரைப் டெயில்கேட் முழுக்க இடம்பெற்று இருக்கிறது. கேபினுள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் எவ்வித மாற்றங்களையும் பெறவில்லை.

பவர்டிரெயினை பொருத்தவரை 2023 செல்டோஸ் மாடலில் தற்போதைய வெர்ஷனில் உள்ளதை போன்றே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை புதிய RDE மற்றும் BS6 2 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். இரு என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

வரும் மாதங்களில் 2023 கியா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடல் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷக் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

Photo Courtesy: Rushlane

Tags:    

Similar News