சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கும் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜர்
- டாட் சார்ஜரை பயனர்கள் வீட்டில் உள்ள சார்ஜிங் மையத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
- குறுகிய காலத்திற்கு டாட் சார்ஜர் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 450X பேஸ் வேரியண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்துவோரின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடிவு செய்து இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் பிரபலமான டாட் சார்ஜர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கி வருகிறது.
தற்போது ஏத்தர் 450X பேஸ் வேரியண்டை 0 முதல் 100 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்ய 14 முதல் 15 மணி நேரங்கள் வரை ஆகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்ய இது நீண்ட நேரம் ஆகும். தற்போது டாட் சார்ஜரை ரூ. 7 ஆயிரத்து 500 எனும் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்குகிறது. டாட் சார்ஜரை பயனர்கள் வீட்டில் உள்ள சார்ஜிங் மையத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
டாட் சார்ஜர் ஒரே இடத்தில் நிரந்தரமாக இன்ஸ்டால் செய்யப்படும் ஒன்றாகும். டாட் சார்ஜர் கொண்டு ஏத்தர் வாடிக்கையாளர்கள் தங்களின் 450X பேஸ் வேரியண்டை 5 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடயும். குறுகிய காலத்திற்கு டாட் சார்ஜர் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாட் சார்ஜர் கொண்டு வாடிக்கையாளரின் சொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். ஒருவரின் டாட் சார்ஜரை மற்றவர்களால் பயன்படுத்தவே முடியாது.