ஆட்டோ டிப்ஸ்

கார்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவித்த சிட்ரோயன்

Published On 2023-03-12 04:15 GMT   |   Update On 2023-03-12 04:16 GMT
  • சிட்ரோயன் நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • புதிய புகை விதிகள் அமலுக்கு வரவுள்ளதை அடுத்து பழைய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் புதிய பிஎஸ்6 2 புகை விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதை அடுத்து பல்வேறு கார் உற்பத்தியாளர்களும் தங்களின் பழைய கார் மாடல்களை விரைவில் விற்றுத்தீர்க்க அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

பிரென்ச் நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இதில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் ஃபிளாக்ஷிப் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் கூடுதல் தள்ளுபடி மற்றும் பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன.

 

சிறப்பு சலுகைகளை அடுத்து C5 ஏர்கிராஸ் விலை பலரையும் கவரும் வகையில் உள்ளது. சிட்ரோயன் C3 காரை வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் வரை ஆன்-ரோட் நிதி சலுகை வழங்கப்படுகிறது.

தற்போது சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் எஸ்யுவி மற்றும் சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதி வரை பொருந்தும். விருப்பமுள்ள பயனர்கள் இவற்றை அருகாமையில் உள்ள சிட்ரோயன் இந்தியா விற்பனையகம் சென்று சலுகை பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு பயன்பெறலாம். 

Tags:    

Similar News