ஆட்டோ டிப்ஸ்

ஸ்கூட்டர் ஃபேன்சி நம்பர் வாங்க ரூ. 1. 12 கோடி கொடுத்த நபர்

Published On 2023-02-18 11:35 GMT   |   Update On 2023-02-18 11:35 GMT
  • இந்தியா மட்டுமின்றி வாகனங்களில் ஃபேன்சி நம்பர் பயன்படுத்தும் முறை பிரபலமாக உள்ளது.
  • ஃபேன்சி நம்பர் வாங்க பலரும் லட்சக்கணக்கில் செலவிடும் வழக்கம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் HP- 99-9999 எனும் நம்பர் பிளேட் வாங்க நபர் ஒருவர் ரூ. 1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 செலவிட்டுள்ளார். ஃபேன்சி நம்பருக்கான ஏலம் ரூ. 1000 விலையில் துவங்கியது. HP 99-9999 எண்ணை பயன்படுத்த 26 பேர் போட்டியிட்டனர். ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் அதிகபட்சம் ரூ. 1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 400 வரை கேட்டனர்.

இத்தனை விலை கொடுத்து யார் இந்த ஃபேன்சி நம்பரை வாங்கினர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், HP 99 பதிவு எண் இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா மாவட்டத்தை சேர்ந்த கொட்கை பகுதியை சேர்ந்தது ஆகும். ஃபேன்சி நம்பர் HP 99-9999 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

 

இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் சமீப காலங்களில் கியர்லெஸ் ஸ்கூட்டர்கள் அதிக பிரபலம் அடைந்து வருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் பொது போக்குவரத்து தடைப்பட்டதை அடுத்து வாகனங்கள் விற்பனை இந்த பகுதியில் கணிசமாக அதிகரித்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் வாங்க இவ்வளவு தொகை செலவிடப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

HP 99-9999 மட்டுமின்றி HP 99-0009 மற்றும் HP 99-0005 போன்ற ஃபேன்சி நம்பர்கள் முறையே ரூ. 21 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. ரூ. 1 கோடி மதிப்பிலான HP 99-9999 ஃபேன்சி நம்பர் சேர்த்து மூன்று எண்களை ஏலத்தில் எடுத்த மூவர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

Tags:    

Similar News