ஆட்டோ டிப்ஸ்

இந்தியாவில் கேரன்ஸ் காரை ரிகால் செய்யும் கியா - காரணம் என்ன தெரியுமா?

Published On 2022-10-05 10:46 GMT   |   Update On 2022-10-05 10:46 GMT
  • கியா நிறுவனத்தின் கேரன்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • எம்பிவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் விலை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

கியா இந்தியா நிறுவனம் தனது கேரன்ஸ் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. கேரன்ஸ் எம்பிவி மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் (Air Bag Control module) பிழை கண்டறியப்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் என கியா தெரிவித்து இருக்கிறது. இந்த பிழை காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது என்ற விவரங்களை கியா வெளியிடவில்லை.

எனினும், கேரன்ஸ் காரில் ஏற்பட்டு இருக்கும் பிழை மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டு விடும். இதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை கியா தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

இது மட்டுமின்றி கேரன்ஸ் பயன்படுத்துவோர் தங்களின் டீலர்களை தொடர்பு கொண்டும் காரில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது கியா செயலி மூலமாகவும் தங்களின் வாகனம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News