ஆட்டோ டிப்ஸ்

கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு - இணையத்தில் லீக் ஆன புது தகவல்!

Published On 2023-01-25 13:54 GMT   |   Update On 2023-01-25 13:54 GMT
  • கேடிஎம் நிறுவனம் தொடர்ந்து எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் மாடல்களின் மீது கவனம் செலுத்த இருக்கிறது.
  • இதுதவிர எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை உருவாக்கும் பணிகளிலும் கேடிஎம் ஈடுபட்டு வருகிறது.

கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது என கிஸ்கா டிசைனை சேர்ந்த ஜெரால்டு கிஸ்கா தெரிவித்து இருக்கிறார்.

பெர்ஃபார்மன்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதில் கேடிஎம் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், ஸ்கூட்டரை மாடலை அறிமுகம் செய்யும் பட்சத்தில் இந்த அடையாளம் பாதிக்கப்படும் என கிஸ்கா டிசைன்ஸ் தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக 2013 டோக்கியோ ஆட்டோ விழாவில் கேடிஎம் நிறுவனம் இ-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கேடிஎம் அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிரெலிஸ் ஃபிரேம், கச்சிதமான டிசைன் மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்டிருந்த ஸ்கூட்டர், தோற்றத்தில் கேடிஎம் ஸ்டைலிங் சார்ந்து இருந்தது.

எனினும், இது கான்செப்ட் வடிவிலேயே இருந்தது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் தற்போது நடைபெறாது என்ற பட்சத்தில் கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இவை ஃபிரீரைடு E-XC மற்றும் SX E 5 மற்றும் SX-E 3 மாடல்கள் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் கேடிஎம் நிறுவனம் E-டியூக் மாடலை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. எனினும், இதன் வெளியீடு பற்றி கேடிஎம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

Tags:    

Similar News