ஆட்டோ டிப்ஸ்

மஹிந்திரா ஸ்கார்பியோ காத்திருப்பு காலம் அதிகரிப்பு - இத்தனை வருடங்களா?

Published On 2023-01-28 14:52 GMT   |   Update On 2023-01-28 14:52 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புது ஸ்கார்பியோ மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ N மாடலை கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து புது ஸ்கார்பியோ N வாங்க பலரும் விருப்பம் தெரிவித்தனர். முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வந்த ஸ்கார்பியோ N வினியோகம் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

ஸ்கார்பியோ N மட்டுமின்றி இரண்டாம் தலைமுறை தார், முற்றிலும் புதிய XUV700 உள்ளிட்ட மாடல்களுக்கும் கடும் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த கார்களின் காத்திருப்பு காலம் அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. ஸ்கார்பியோ N எண்ட்ரி லெவல் மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 85 முதல் 90 வாரங்களாக இருக்கிறது. Z4 வேரியண்டிற்கான காத்திருப்பு காலம் 90 முதல் 95 வாரங்கள் ஆகும்.

ஸ்கார்பியோ N டீசல் Z6 மாடலுக்கான காத்திருப்பு காலம் 100 முதல் 105 வாரங்களாக உள்ளது. Z8 பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கும் இதே போன்ற காத்திருப்பு காலம் உள்ளது. Z8 லக்சரி வேரியண்ட் ஆட்டோமேடிக் வெரிஷனுக்கான காத்திருப்பு காலம் 20 முதல் 25 வாரங்களாக உள்ளது. டாப் எண்ட் வேரியண்ட்-ஆன Z8 L மேனுவல் வாங்க 70 முதல் 75 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம்ஹாக் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம்ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இருவித என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் 203 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் மாடல் 203 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 175 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வழங்குகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 175 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

Tags:    

Similar News