ஆட்டோ டிப்ஸ்
null

முற்றிலும் புதிய பிரெஸ்ஸா CNG வாங்க இத்தனை மாதங்கள் ஆகும் - தொடர்ந்து உயரும் காத்திருப்பு காலம்!

Published On 2023-03-21 15:29 GMT   |   Update On 2023-03-21 15:30 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா CNG மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய பிரெஸ்ஸா CNG மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிரெஸ்ஸா CNG மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முற்றிலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான காத்திருப்பு காலம் அதற்குள் ஆறு மாதங்களாக அதிகரித்துவிட்டது. மாருதி சுசுகி நிறுவனம் புதிய பிரெஸ்ஸா CNG மாடலுக்கான முன்பதிவை சமீபத்தில் துவங்கியது.

முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடல் - LXi, VXi மற்றும் ZXi என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய பிரெஸ்ஸா CNG மாடலில் 1.5 லிட்டர், டூயல்ஜெட் டூயல் VVT NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த பெட்ரோல் என்ஜின் 99.2 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இதன் செயல்திறன் 86.63 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் ஆக குறைந்துவிடும்.

 

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மேலும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய CNG மாடல் லிட்டருக்கு 25.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை பிரெஸ்ஸா CNG டாப் எண்ட் மாடலில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குரூயிஸ் கண்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், பவர்டு ரியர்-வியூ மிரர்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News