ஆட்டோ டிப்ஸ்

600கிமீ ரேன்ஜ் வழங்கும் மெர்சிடிஸ் மேபேக் EQS 680 அறிமுகம்

Published On 2023-04-17 15:33 GMT   |   Update On 2023-04-17 15:33 GMT
  • மெர்சிடிஸ் மேபேக் பிராண்டின் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் 649 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.
  • இது மேபேக் பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது மெர்சிடிஸ் மேபேக் EQS 680 எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இது மேபேக் பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஆகும். தோற்றத்தில் புதிய மேபேக் EQS 680 மாடல் அதன் ஸ்டாண்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த எஸ்யுவி விசேஷ பெயிண்ட் உடன் கிடைக்கிறது.

இதன் இண்டீரியர் அதிக விலை உயர்ந்ததாகவும், இதில் மிகவும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய மேபேக் EQS 680 மாடல் அதிவேக EQS எஸ்யுவி என்ற பெருமையை பெற்று இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் மேபேக் EQS 680 மாடல்- ஹைடெக் சில்வர் / அப்சிடியன் பிளாக், ஹைடெக் சில்வர் / நாட்டிக்கல் புளூ, அப்சிடியன் பிளாக் / செலனைட் கிரே, அப்சிடியன் பிளாக் / கலஹாரி கோல்டு மற்றும் வெல்வட் பிரவுன் / ஆனிக்ஸ் பிளாக் என ஐந்து விதமான டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.

 

பொனெட்டில் மெர்சிடிஸ் லோகோ இடம்பெற்று இருக்கிறது. இதன் நோஸ் பகுதியில் பிளாக் பேனல் மற்றும் க்ரோம் பிளேட் செய்யப்பட்ட ஸ்ட்ரிப்கள் உள்ளன. இதன் ஜன்னல் பகுதிகளில் க்ரோம் சரவுண்ட்கள், டி-பில்லரில் மேபேக் லோகோ உள்ளது. இந்த எஸ்யுவியை பயனர்கள் 21 இன்ச் அல்லது 22 இன்ச் என இருவித வீல் அமைப்புகளில் பெற்றுக் கொள்ளலாம்.

காரின் உள்புறம் மூன்று ஸ்கிரீன்கள் கொண்ட 'MBUX ஹைப்பர்ஸ்கிரீன்' இன்ஃபோடெயின்மெண்ட் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது மேபேக் சார்ந்த கஸ்டமைசேஷனுடன் தீம் மற்றும் நிறங்களை கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு அம்சமாக இந்த காரின் பின்புறம் வெண்டிலேஷன், மசாஜ், கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் ஹீடிங் வசதி வழங்கும் எக்சிக்யூடிவ் சீட்கள் உள்ளன.

 

இத்துடன் இரண்டு 11.6 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேக்கள், பின்புறம் MBUX டேப்லெட், MBUX இண்டீரியர் அசிஸ்ட் வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு கிளைமேட் கண்ட்ரோல் கப் ஹோல்டர்கள், ரிடிசைன் செய்யப்பட்ட செண்டர் கன்சோல் எக்ஸ்டென்ஷன், கூலிங் கம்பார்ட்மெண்ட் மற்றும் சில்வர் பிளேட் ஷேம்பெயின் கோப்பைகள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் மேபேக் EQS எஸ்யுவி மாடலில் ஆக்டிவ் ஆம்பியண்ட் லைட்டிங் வசதி வழங்கப்படுகிறது. இதில் 253 எல்இடிக்களை தனித்தனியே, 64 வித்தியாசமான நிறங்களில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர் பேலன்ஸ் ஃபிராக்ரன்ஸ் பேக்கேஜ் மற்றும் பர்மெஸ்டர் 4டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

 

மெர்சிடிஸ் மேபேக் EQS 680 மாடலில் 649 ஹெச்பி பவர், 950 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கிலோமீட்டர்கள் என்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் 108 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது.

இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் 22 கிலோவாட் ஆன்போர்டு ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது காரை 6 மணி 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 200 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டும் சார்ஜ் செய்யலாம். இதை கொண்டு காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 220 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். 

Tags:    

Similar News