ஆட்டோ டிப்ஸ்

விரைவில் அறிமுகமாகும் நிசான் 7 சீட்டர் கார்

Published On 2023-02-06 12:26 GMT   |   Update On 2023-02-06 12:26 GMT
  • இந்தியாவில் புது கார் அறிமுகம் செய்வது பற்றி நிசான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • புதிய கார் இந்தியா மட்டுமின்றி லத்தின் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகமாகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உருவெடுக்க நிசான் திட்டமிட்டு இருந்தது. பல்வேறு பிரிவுகளில் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதில் நிசான் கவனம் செலுத்தி வந்தது. மைக்ரா ஹேச்பேக், சன்னி செடான், எவானியா எம்பிவி, நிக்ஸ் எஸ்யுவி, டெரானோ எஸ்யுவி என ஏராள மாடல்களை அறிமுகம் செய்தது. எனினும், இவை எதுவும் நிசான் நிறுவனத்திற்கு பலன் அளிக்கவில்லை.

இந்திய சந்தையில் இருந்து வெளியேற நிசான் திட்டமிட நினைத்த காலத்தில் மேக்னைட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேக்னைட் மாடல் தனியே நின்று நிசான் இந்தியாவை விட்டு வெளியேறாமல் செய்தது. ரெனால்ட்-நிசான் கூட்டணியில் ஏற்கனவே பிளாட்ஃபார்ம் மற்றும் என்ஜின் பகிர்ந்து கொண்டு வருகின்றன. முன்னதாக டஸ்டர் மற்றும் டெரானோ மற்றும் சன்னி, ஸ்கேலா மாடல்கள் இவ்வாறு அறிமுகமாகின.

சமீபத்தில் ரெனால்ட் கைகர் மாடல் நிசான் மேக்னைட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டிரைபர் மாடலை போன்ற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேக்னைட் பெற்று இருக்கும் வெற்றியை அடுத்து நிசான் நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு புது காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

புதிய நிசான் கார் ரெனால்ட் டிரைபர் மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது. டிரைபர் மாடல் சப்-4 மீட்டர் எம்பிவி மாடல் ஆகும். இதே போன்ற வழிமுறையை டேட்சன் பிராண்டு முதல் முறையாக தனது கோ பிளஸ் மாடலில் பின்பற்றி இருந்தது. டிரைபர் மாடல் எண்ட்ரி லெவல் 7 சீட்டர் காராக டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

நிசான் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் மேக்னைட் மற்றும் கிக்ஸ் என இரண்டு கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாத வாக்கில் கிக்ஸ் மாடலின் விற்பனை நிறுத்தப்பட இருக்கிறது. நிசான் நிறுவனத்தின் டிரைபர் வெர்ஷன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News