null
திடீரென தீப்பிடித்து எரிந்த நெக்சான் EV - காரணத்தை புட்டுப்புட்டு வைத்த டாடா மோட்டார்ஸ்!
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- நெக்சான் EV மாடல் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் டாடா மோட்டார்ஸ் பதில் அளித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவில் நெக்சான் EV தீப்பிடித்தது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே நெக்சான் EV மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து டாடா மோட்டார்ஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி கார் தீப்பிடித்து எரிய வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு தான் காரணம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. நெக்சான் EV மாடலை அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையத்தில் சரிபார்த்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டது என்றும் தெரிவித்து இருக்கிறது.
காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையிலும், காரில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர் என கூறப்படுகிறது. கார் தீப்பிடித்து எரியும் முன்பாக அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையத்தில் சர்வீஸ் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.
அதன்படி நெக்சான் EV மாடலில் ஹெட்லைட் மாற்ற அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சம்மந்தப்பட்ட சர்வீஸ் மையம் சார்பில் காரின் ஹெட்லைட்டை மாற்றிய போது தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே காரில் தீவிபத்து ஏற்பட்டது.
நெக்சான் EV மாடலில் தீவிபித்து ஏற்பட்டதை அடுத்து வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை டாடா மோட்டார்ஸ்-இன் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர்கள் மற்றும் டச்பாயிண்ட்களில் மட்டும் சரி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
Photo Courtesy: @thatsilvercity