ஆட்டோ டிப்ஸ்

உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஒகினவா

Published On 2023-03-16 11:04 GMT   |   Update On 2023-03-16 11:04 GMT
  • ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
  • 2017 ஆம் ஆண்டு ஒகினவா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் முன்னணி இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒகினவா உற்பத்தி ஆலையில் இருந்து 2.5 லட்சமாவது வாகனம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் 2.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது.

2015 ஆம் ஆண்டு இந்தியாவில் பணிகளை துவங்கிய ஒகினவா 2017 ஆண்டு சந்தையில் களமிறங்கி தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் ஒகினவா ரிட்ஜ் மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன்பின் ஒகினவா பிரைஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

 

மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மாணியம் பெற்ற முதல் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் உள்ளது. ஒகினவா நிறுவனம் தற்போது ஐபிரைஸ் பிளஸ், ஐபிரைஸ் ப்ரோ, லைட் மற்றும் ஆர்30 போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 2020 வாக்கில் ஒகினவா நிறுவனம் இந்தியவின் முதல் கஸ்டமைசேஷன் வசசதி கொண்ட B2B எலெக்ட்ரிக் இருசக்கர வானத்தை 2020 வாக்கில் அறிமக செய்தது.

2021 ஆண்டு இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த ஒகினவா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒகினவா கேலக்ஸி ஸ்டோர்களை திறந்தது. இந்திய சந்தையில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனம், விற்பனையில் இத்தனை இலக்கை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஒகினவா பெற்று இருக்கிறது.

Tags:    

Similar News