ஆட்டோ டிப்ஸ்

ஒலா ஸ்கூட்டர் விற்பதாக கூறி ஏமாற்றிய நபர் அதிரடி கைது - வெளியான சுவாரஸ்ய தகவல்!

Published On 2023-05-11 08:06 GMT   |   Update On 2023-05-11 08:06 GMT
  • ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளர் என்று நம்பி முதற்கட்டமாக ரூ. 499 தொகையை முன்பணமாக செலுத்தினார்.
  • காவல் துறையினர், புகார் கொடுத்தவர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை கொண்டு பாண்டாவை பிடித்தனர்.

ஒலா எலெக்ட்ரிக் விற்பனையாளர் என கூறி ஏமாற்றி வந்த நபரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தானேவை அடுத்த டொம்பாலி பகுதியை சேர்ந்த ராஜேந்திர ஷர்மா பாண்டா என்ற நபர் 'ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டி' விற்பனையாளர் என்று கூகுள் தளத்தில் போலி விளம்பரங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதை பார்த்து ஸ்கூட்டரை வாங்க விரும்புவோரிடம் இவர் பணம் வசூலித்து ஏமாற்றி வந்துள்ளார்.

அந்த வகையில், துவாராகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த நபரை பாண்டா ஏமாற்றி இருக்கிறார். இதையடுத்து ஏமாற்றப்பட்டவர் துவாரகா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புதாரை வைத்து முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாண்டாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக ஸ்கூட்டரை வாங்க பாண்டாவை அனுகிய நபர், பாண்டா ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளர் என்று நம்பி முதற்கட்டமாக ரூ. 499 தொகையை முன்பணமாக செலுத்தியுள்ளார். பின் ஸ்கூட்டரை வாங்குவதற்காக ரூ. 80 ஆயிரத்து 999 தொகையை செலுத்தினார். ஒருவாரத்தில் ஸ்கூட்டர் வினியோகம் செய்யப்படும் என்று பாண்டா இவரிடம் தெரிவித்து இருக்கிறார். எனினும், இவருக்கு ஸ்கூட்டர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது.

இதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல் நிலையத்தின் உதவியை நாடியிருக்கிறார். காவல் துறையினர் புகார் கொடுத்தவர், பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை கொண்டு பாண்டாவை பிடித்தனர். காவல் துறையிடம் சிக்கிய பாண்டா தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Tags:    

Similar News