ஆட்டோ டிப்ஸ்

தமிழ் நாட்டில் உருவாகும் புதிய உற்பத்தி மையம்.... அசத்தும் ராயல் என்பீல்டு

Published On 2023-04-10 14:35 GMT   |   Update On 2023-04-10 14:35 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய புதிய ஆலையை கட்டமைக்கிறது.
  • எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டில் புதிதாக உற்பத்தி மையம் ஒன்றை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வாகன உற்பத்தி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரால் என்பீல்டு நிறுவனம் சென்னையை அடுத்த செய்யாறு பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த 12 முதல் 24 மாதங்களில் ரூ. 1000 முதல் ரூ. 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தி திறனுக்கு ஏற்ப இந்த தொகையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிகிறது. இந்த ஆலையில் ஐசி என்ஜின் உற்பத்தி பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

 

வாகனங்கள் அறிமுகத்தை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. சமீபத்தில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மற்றும் இண்டர்செப்டார் / காண்டினென்டல் ஜிடி 650 மாடல்களின் அலாய் வீல் வெர்ஷனை மாடலை அறிமுகம் செய்தது.

இந்த வரிசையில், ஷாட்கன் 650 மற்றும் ஹிமாலயன் 450 மாடல்கள் விரைவில் இணையும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் யூனிட் வல்லம் வடகால் ஆலையில் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது. செய்யாறில் உருவாகும் ஆலையை பயன்படுத்தி பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு படிப்படியாக மாற ராயல் என்பீல்டு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News