ஆட்டோ டிப்ஸ்

உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டி அசத்திய டாடா மோட்டார்ஸ்

Published On 2023-03-03 10:43 GMT   |   Update On 2023-03-03 10:43 GMT
  • 2020 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உற்பத்தியில் 40 லட்சம் யூனிட்களை எட்டியது.
  • ஊழியர், வாடிக்கையாளர்களுக்கு புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் சிறப்பு திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிவிக்க இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை வாகன உற்பத்தியில் 50 லட்சம் யூனிட்கள் எனும் புதிய மைல்கல் எட்டி இருக்கிறது. 40 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ததில் இருந்து வெறும் 2.5 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டியிருக்கிறது. முன்னதாக 2020 வாக்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து இருப்பதாக அறிவித்து இருந்தது.

2004 ஆம் ஆண்டு பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்திருந்த டாடா மோட்டார்ஸ், அதன் பின் 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையே 20 லட்சம் மற்றும் 30 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்தது. உற்பத்தி மைல்கல்கள் சந்தையில் டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முந்தைய மைல்கல்களை 5 முதல் 6 ஆண்டுகளில் எட்டி வந்தது. தற்போது 40-இல் இருந்து 50 லட்சம் வாகனங்கள் எனும் இந்த இடைவெளி 2.5 ஆண்டுகளாக மாறி இருக்கிறது.

 

"டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று உற்பத்தியில் 50 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியிருக்கிறோம். இந்த பயணம், ஒவ்வொரு பத்து லட்சம் யூனிட்களிலும் அதிக ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. ஆனாலும், இந்தியாவை ஒவ்வொரு புதிய வாகனத்தின் மூலம் தொடர்ந்து மாற்றி வருகிறோம். ஒவ்வொரு புதுமையான எண்ணமும் இந்தியாவை வளர்க்கும் வகையிலேயே இருந்து வந்தது."

"பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அறியப்படும் டாடா மோட்டார்ஸ், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் இன்றி இந்த சாதனை இல்லை. இந்த மைல்கல்லை எங்களின் ஊழியர்கள், வினியோகஸ்தர்கள், சேனல் பார்ட்னர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு அர்பணிக்கிறோம்," என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.

Tags:    

Similar News