ஆட்டோ டிப்ஸ்

9 புது கார்கள் - ஆட்டோ எக்ஸ்போவில் அசத்திய டாடா மோட்டார்ஸ்

Published On 2023-01-12 12:45 GMT   |   Update On 2023-01-12 12:45 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு கார்களை காட்சிக்கு வைத்து இருக்கிறது.
  • அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு புது கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது மாடல்களை காட்சிக்கு வைத்துருக்கிறது. இவற்றில் ICE (பெட்ரோல்), EV மற்றும் CNG போன்ற மாடல்களும் இடம்பெற்று இருந்தன. இந்த புது மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து டாடா மோட்டார்ஸ் அதிக விவரங்களை வெளியிடவில்லை.

அந்த வகையில் தற்போது நெக்சான் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஹேரியர், சஃபாரி போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் 2.0 ஃபியாட் என்ஜின் மேலும் சில காலத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இம்முறை ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரையும் கவர்ந்த மாடல்களில் ஒன்றாக டாடா சியெரா EV கான்செப்ட் இரண்டாவது வெர்ஷன் இருந்தது.

தற்போது இந்த மாடல் நான்கு கதவுகள், கன்வென்ஷனல் கண்ட்ரோல் மற்றும் ஸ்விட்ச்கியர் கொண்ட இண்டீரியர் உள்ளது. அந்த வகையில், இந்த கார் உற்பத்திக்கு பெருமளவு தயாராகி விட்டது என்றே தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 2 ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜென் 2 ஆர்கிடெக்ச்சர் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்ட ஆல்ஃபா பிளாட்பார்ம் வெர்ஷன் ஆகும்.

இந்த மாடலில் டாடாவின் புதிய தலைமுறை 1.5 லிட்டர் டைரெக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 160 முதல் 180 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது. இந்த என்ஜின் ஹேரியர், சஃபாரி மற்றும் கர்வ் எஸ்யுவி மாடல்களில் வழங்கப்படலாம். இத்துடன் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா அவின்யா மாடல் முதல் முறையாக பொது வெளியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடல் பிஸ்போக் ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 2025 வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. அவின்யா மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமே அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த காரின் ICE வெர்ஷன் அறிமுகமாகாது.

டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் பிளான்க்டு-ஆஃப் கிரில், ஏரோ-எஃபிஷியண்ட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகமாகும் என தெரிகிறது.

டாடா கர்வ் கான்செப்ட் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் இடம்பெற்று இருக்கிறது. இந்த கார் கிரில், ஃபாக் லேம்ப், வீல், டயர், பாடிவொர்க் மற்றும் இண்டீரியர் போன்ற அம்சங்களுடன் உற்பத்திக்கு தயாரான நிலையிலே காட்சியளிக்கிறது. சியெரா போன்றே இந்த மாடலும் எலெக்ட்ரிக் மற்றும் ICE என இருவித பவர்டிரெயின்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த பெட்ரோல் என்ஜின்கள் 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ, புது தலைமுறை 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ யூனிட் வழங்கப்படலாம்,

டாடா டியாகோ EV காரின் ஸ்போர்ட் வேரியண்ட் ஆக டியாகோ EV ப்ளிட்ஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடலில் கருப்பு நிற அலாய் வீல்கள், வெளிப்புறம் சிறு அப்டேட்கள், EV பேட்ஜ் அருகில் புளூ போல்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதிவர இந்த காரின் பவர்டிரெயின் பற்றி எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த கார் 2024 வாக்கில் அறிமுகமாகிறது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா பன்ச் EV மாடல் காட்சிக்கு வைக்கப்படவில்லை. மாறாக பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்களில் iCNG வெர்ஷன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தோற்றத்தில் பன்ச் CNG மாடல் எவ்வித மாற்றமும் பெறவில்லை. இரு கார்களிலும் ட்வின் சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றுடன் டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிஷன் மாடல்கள் இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கின்றன.

டாடா அல்ட்ரோஸ் ரேசர் எடிஷன் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் அல்ட்ரோஸ் i டர்போ காரின் டாப் எண்ட் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 120 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. அல்ட்ரோஸ் ரேசர் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Tags:    

Similar News