ஆட்டோ டிப்ஸ்

வாகன விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய டாடா பன்ச்!

Published On 2023-03-20 15:28 GMT   |   Update On 2023-03-20 15:28 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் நான்கு நிறங்கள், ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடலின் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் விற்பனையில் 1.75 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. 2021 அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் மாடலின் விலை ரூ. 6 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

டாடா பன்ச் மாடல்: அடோமிக் ஆரஞ்சு-பிளாக் ரூஃப், டொர்ணடோ புளூ-வைட் ரூஃப், கலிப்சோ ரெட் - வைட் ரூஃப், ஆர்கஸ் வைட் - பிளாக் ரூஃப், டேடோனா கிரே - பிளாக் ரூஃப், டிராபிக்கல் மிஸ்ட் - பிளாக் ரூஃப் மற்றும் மீடியோர் பிரான்ஸ் - பிளாக் ரூஃப் என ஏழு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார் பியுர், அட்வென்ச்சர், அகம்ப்லிஷ்டு மற்றும் கிரேயடிவ் என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

 

இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் கொண்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மாடலின் CNG வெர்ஷனை காட்சிக்கு வைத்திருந்தது. வரும் மாதங்களில் டாடா பன்ச் CNG மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News