ரூ. 6 லட்சம் வரை தள்ளுபடி.. டொயோட்டாவின் அசத்தல் அறிவிப்பு!
- டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
- ஹிலக்ஸ் டாப் எண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.
டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் ஹிலக்ஸ் பிக்கப் டிரக்-க்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றனர். பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று துவங்குகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனைக்கு வந்தது.
ஹிலக்ஸ் மாடல் இதுவரை சுமார் 1300 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அறிமுகத்தின் போது டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பிறகு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
என்ட்ரி லெவல் மாடல்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், டாப் எண்ட் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஹிலக்ஸ் டாப் எண்ட் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரமும், ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.
தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ. 6 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஹிலக்ஸ் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடுகிறது.
டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஹிலக்ஸ் மாடலில் ஏழு ஏர்பேக் வழங்கப்பட்டு உள்ளது.