ஆட்டோ டிப்ஸ்

இன்னோவா ஹைகிராஸ் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-03-02 16:58 IST   |   Update On 2023-03-02 16:58:00 IST
  • டொயோட்டா ஹைகிராஸ் புதிய வேரியண்ட் VX மற்றும் ZX வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
  • இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் இன்னோவா ஹைகிராஸ் VX (O) என அழைக்கப்படுகிறது. இது VX மற்றும் ZX வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹைகிராஸ் VX (O) 7 சீட்டர் விலை ரூ. 26 லட்சத்து 73 ஆயிரம் என்றும் 8 சீட்டர் விலை ரூ. 26 லட்சத்து 78 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்னோவா ஹைகிராஸ் VX (O) மாடலின் 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

இன்னோவா ஹைகிராஸ் VX வேரியண்டில் உள்ள அனைத்து அம்சங்களுடன் புதிய VX (O) வேரியண்டில் பானரோமிக் சன்ரூஃப், மூட் லைட்டிங், எல்இடி ஃபாக் லேம்ப்கள், 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆறு ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹைகிராஸ் VX (O) வேரியண்டில் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதோடு, இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 75 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News