ஆட்டோ டிப்ஸ்

அர்பன் குரூயிசர் ஹைரைடர் ஹைப்ரிட் விலையை திடீரென மாற்றிய டொயோட்டா

Published On 2023-02-03 10:43 GMT   |   Update On 2023-02-03 10:43 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விலை அறிவிக்கப்பட்டது.

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் ஹைப்ரிட் மாடல் விலையை ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு காரின் மூன்று வேரியண்ட்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் விலை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த காரின் முதல் விலை உயர்வு இது ஆகும்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த காரின் CNG வேரியண்ட் விலைகளும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்- E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த விலை ரூ. 15 லட்சத்து 61 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஹைரைடர் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் இ-டிரைவ் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்டிராங் ஹைப்ரிட் எஸ்யுவி லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டொ தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News